அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சீனா, பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சீன சுங்கத் துறை இன்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தைவானில் இருந்து மீன் மற்றும் பழங்கள் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் இந்த பொருட்களில் அதிகளவு பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஜூன் மாதத்தில் சில உறைந்த மீன் பொதிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக மணல் ஏற்றுமதியை தடை செய்து சீன வர்த்தக அமைச்சகம் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தைவானின் விவசாயத் துறையை சீனா அடிக்கடி குறிவைத்து அரசியல் நோக்கத்துடன் தடைகளை விதித்துள்ளது. நான்சி பெலோசி சுற்றுப்பயணத்தில் இருந்தபோது அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தினர்.
தைவானின் பழம் வளரும் பகுதிகள் ஜனாதிபதி சாய் இங்-வெனின் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கின்றன. தைவான் சுதந்திரத்தை ஜனநாயகக் கட்சி ஆதரிக்கிறது. அதனால்தான் இந்தப் பகுதிகளைக் குறிவைத்து சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh