உலகிலேயே பிலிப்பைன்ஸ் நாட்டில்தான் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இதன் சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில் அங்குள்ள மேயோன் நகரில் உள்ள எரிமலை வெடிக்கும் அபாயத்தில் உள்ளதால் சுமார் 6 கிமீ சுற்றளவு உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எரிமலையின் உச்சிக்கு அருகில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
