‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலக சினிமா பார்வையாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்று சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இந்த விஷுவல் வொண்டர் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. உலக பாக்ஸ் ஆபிஸில் கோடிகளை வசூலித்தது.
அவதார் தி வே ஆஃப் வாட்டர் நான்கு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘சிறந்த படம்’, ‘சிறந்த ஒலி’, ‘சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு’ மற்றும் ‘சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்’ ஆகியவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில், சிறந்த படம் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருதுகள் தவறவிடப்பட்டு, சிறந்த விஷுவல் எஃபெக்டில் விருது கிடைத்தது.
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில், ‘ஆல் க்வைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்’, ‘தி பேட்மேன்’, ‘பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்’ மற்றும் ‘டாப்கன்: மேவரிக்’ ஆகியவற்றுடன் போட்டியிட்டு விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் அவதார் விருதை வென்றது.
அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஜேம்ஸ் கேமரூன் காட்சிகள் மூலம் உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்.