ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணங்களை இரு மடங்காக உயர்த்தி உள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு போட்டியாக ஆஸ்திரேலிய அரசும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
இம்மாதம் முதல் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் 710 ஆஸ்திரேலிய டாலர்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் 59 ஆயிரத்து 415 ரூபாயாக இருந்த விசா கட்டணம் 89 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.