16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை.. சட்ட மசோதாவுக்கு ஆஸ்திரேலியா ஒப்புதல்..!
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ள சட்டம் தொடர்பான மசோதாவுக்கு அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, 102 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அனைத்து பெரும்பான்மை கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவாகவும், 13 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இந்த மசோதாவுக்கு செனட் சபையில் ஒப்புதல் கிடைத்தவுடன் சட்டமாகி விடும். அதன்பிறகு விரைவில் சமூக வலைதளங்களில் அரசு உத்தரவு பிறப்பிக்கும். இதற்கிடையில், இந்த மசோதா சட்டமானால், சமூக ஊடகங்களை தடை செய்யும் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறும்.
Posted in: உலகம்