ஜெருசலேம்: காஸா மீது இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது. சமீபத்தில், வடக்கு காசாவில் உள்ள அட்வான் மருத்துவமனையின் அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்த சம்பவத்தில் நான்கு மருத்துவ பணியாளர்கள் உட்பட 29 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலஸ்தீனிய சிவில் அவசர சேவைகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதல்களால் சுமார் 100,000 பாலஸ்தீனியர்கள் சரியான உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி பட்டினியில் உள்ளனர்.
காசாவில் உள்ள மருத்துவமனைகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வளங்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்வதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 44,600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.