விளம்பரம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் தீவிரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். பர்சலோகோ நகரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு மணி நேரத்தில் சுமார் 600 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த கொடூர சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது.
ஆகஸ்ட் 24 அன்று, பர்சலோகோ நகரில் பைக்கில் வந்த பயங்கரவாதிகள், கண்ணில் பட்டவர்களை சுட்டுக் கொன்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய தேசத்துடன் இணைந்த ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமின் தீவிரவாதிகள் இந்த கொடூரத்தை செய்துள்ளனர்.
விளம்பரம்
விளம்பரம்