தெற்கு ஈக்வடார் மற்றும் வடக்கு பெருவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 126 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பல வீடுகள் மோசமாக சேதமடைந்துள்ளன. அதே நேரத்தில், இந்த நிலநடுக்கத்தால் ஈக்வடாரில் இதுவரை 13 பேரும், பெருவில் ஒருவரும் இறந்துள்ளனர். மேலும் 126 பேர் காயமடைந்துள்ளனர்.
- Advertisement -
நிலநடுக்கத்தால் ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளனர், அவர்களைக் காப்பாற்ற மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தின் தீவிரம் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🇪🇨 | AHORA: Machala, Ecuador: pic.twitter.com/5pW9gIzAed
- Advertisement -
— Alerta News 24 (@AlertaNews24) March 18, 2023