பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பணியமர்த்தப்பட்டதாலும், பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையாலும், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி, ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.
அமேசான் தற்போது உலகளவில் 1.5 மில்லியன் பணியாளர்களைக் கொண்டுள்ளது. புதிதாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் மற்றும் உலகப் பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதால் அதன் செலவுகளைக் குறைக்கும் வகையில் வேலைகளை குறைக்க முடிவு செய்துள்ளது.