அமெரிக்க விமான நிலையத்திற்கு சர்வதேச நாடுகளில் இருந்து, ஏகப்பட்ட பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். கொரோனா காரணமாக, ஏற்கனவே அமெரிக்காவுக்கு வரும் சில நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க விமான போக்குவரத்து தலைமையகத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்கள், அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
விமான நிலைய ஊழியர்களுக்கும் விமானிகளுக்கும் இடையே தகவல் அனுப்பும் அமைப்பில், இந்த கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் 760 க்கும் மேற்பட்ட விமானங்கள் முடங்கியுள்ளதாகவும், அமெரிக்க தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் முடங்கியுள்ளனர்.