உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் தனது கூகுள் மொழிபெயர்ப்பில் மற்றொரு புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன், தற்போதுள்ள மொழிகளைத் தவிர மற்ற சில மொழிகளை மொழிபெயர்க்க முடியும். சமீபத்தில் கூகுள் அதன் மொழிபெயர்ப்பில் 110 புதிய மொழிகளைச் சேர்த்துள்ளது. இதுவரை 133 மொழிகளில் மட்டுமே இந்த விருப்பம் இருந்தது, இப்போது இது மொத்தம் 243 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். இந்தப் புதிய மொழிகளைச் சேர்க்க, நிறுவனம் Palm 2 Large Language Model (LLM) ஐப் பயன்படுகிறது.