கண்ணை மூடிக்கொண்டு 10 வயது சிறுமி சதுரங்க பலகையை 45.72 வினாடிகளில் பொருத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்த புனிதமலர் ராஜ்சேகர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். ‘கண்களை மூடிக்கொண்டு வேகமாக சதுரங்க பலகையை அசெம்பிள் செய்த சிறுமி’ என்ற பட்டத்தை கின்னஸ் சாதனையில் படைத்தார்.
She can quite literally break a record with her eyes closed…https://t.co/Qm3d9lD072
— Guinness World Records (@GWR) September 25, 2023
விருதை பெற்றுக்கொண்ட அவர், ‘எனக்கு எனது தந்தை தான் பயிற்சி அளித்தார், நாங்கள் இருவரும் தினமும் செஸ் விளையாடினோம்.
பள்ளி வளாகத்தில் நடந்த இந்த சாதனையை, பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கண்டுகளித்தனர்.
‘எனக்கு ஆர்வமுள்ள துறையில் மேலும் சாதிக்க வேண்டும். கணிதம் எனக்கு மிகவும் பிடித்த பாடம், எதிர்காலத்தில் விண்வெளி விஞ்ஞானியாக வர விரும்புகிறேன்’ என்றார் புனிதமலர்.
புனிதமலர் ஆசியாவின் சிறந்த குழந்தை விருது 2022-2023 உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் மற்றும் மலேசியாவின் கிட்ஸ் காட் டேலண்ட் போன்ற பல்வேறு போட்டிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.