-Advertisement-
சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், நாட்டில் ஆயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஏர்பினிட்டி என்ற ஆராய்ச்சி நிறுவனம் தனது அறிக்கையில், சீன நாட்டில் தினமும் சுமார் 9 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பால் இறக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்னரே சில மாகாணங்களில் கொரோனாவின் தீவிரம் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
-Advertisement-
டிசம்பரில் மட்டும் ஒரு கோடியே 86 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
-Advertisement-