நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட விமான விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர். இதில் ஐந்து இந்தியர்களும் அடங்குவர்.
நேபாளத்தின் காஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் 72 பேருடன் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இறந்தவர்களில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேபாள அரசு வெளியிட்டுள்ளது.
- Advertisement -
இறந்தவர்களில் ஐந்து இந்தியர்கள், நான்கு ரஷ்யர்கள், இரண்டு தென் கொரியர்கள் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.