காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்கின்றன. திங்களன்று, மேற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் நடந்த தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகளே தங்களின் இலக்கு என்று கூறிய இஸ்ரேல் ராணுவம், கான் யூனிஸில் 30 பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக அறிவித்தது. இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் காஸாவில் இதுவரை 39,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.