சூடானில் ராணுவத்தினருக்கு இடையே இரண்டு மாதங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக மாறியுள்ளது. அதிகாரப் போட்டி காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
மறுபுறம், இந்த போர் அங்குள்ள குழந்தைகளுக்கு சாபமாக மாறியுள்ளது. தலைநகர் கார்ட்டூமில் உள்ள அனாதை இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ள தகவலின்படி, சூடானின் கட்டுப்பாட்டிற்காக அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே இரண்டு மாதங்களாக மோதல்கள் நடந்து வருகிறது.
இதன் விளைவாக, உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி 60 குழந்தைகள் ஆறு வாரங்களுக்குள் உயிரிழந்துள்ளனர். இரண்டு நாட்களில் 26 குழந்தைகள் இறந்தன. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சலால் பல குழந்தைகள் இறந்ததாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
