5 கிரகங்களின் அணிவகுப்பு இன்று இரவு தொடங்குகிறது. சில தினங்களுக்கு முன்பாக வானத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்கள் அருகருகே பிரகாசமாக ஜொலித்தது வியப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், யுரேனஸ் ஆகிய 5 கிரகங்களின் அணிவகுப்பு நிகழ இருக்கிறது.
நாளை சூரியன் மறைந்த பிறகு மேற்குப்பகுதியில் வானம் தெளிவாக இருக்கும்போது உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை காண முடியும். வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றை வெறும் கண்ணால் தெளிவாக பார்த்து ரசிக்கலாம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியிலும் சுக்கிரன், குரு, சனி, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரிசையாக அணிவகுத்து நின்றது குறிப்பிடத்தக்கது.