ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழ்மையான நாடுகளில் ஒன்றான சோமாலியா பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. ஹோட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 63 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவின் துணை அமைப்பான அல் ஷபாப் பொறுப்பேற்றுள்ளது.
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள லிடோ கடற்கரைக்கு அருகில் உள்ள ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர், சமையல் அறையில் வெடிபொருட்கள் நிரம்பியிருந்த இடத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டார். பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆயுதம் ஏந்திய 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றொரு பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டார்.