உலகெங்கிலும் உள்ள ஐடி ஊழியர்கள் பெரும் ஆட்குறைப்பு காரணமாக கவலையடைந்துள்ளனர். கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட பல தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஏற்கனவே ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.
பொருளாதார மந்தநிலை உருவாகும் நேரத்தில் கடினமான முடிவுகள் செயல்படுத்தப்படுகின்றன. சமீபத்தில், ஜெர்மன் மென்பொருள் நிறுவனமான எஸ்ஏபியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
- Advertisement -
இந்நிறுவனம் இந்த ஆண்டு 3,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது. முக்கிய வணிகப் பகுதியை வலுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஏபி எடுத்த இந்த முடிவால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 2.5 சதவீத ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். SAP உலகளவில் 1,20,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.