நேபாளத்தில் நிலச்சரிவு.. ஆற்றில் கவிழ்ந்த 2 பேருந்துகள்.. 66 பேர் மாயம்..!
நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் கவிழ்ந்தன. அதில் பயணம் செய்த 66 பயணிகளை தேடும் பணியில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய நேபாளத்தில் உள்ள மதன்-ஆஷ்ரித் தேசிய நெடுஞ்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இரண்டு பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி ஆற்றில் விழுந்தன. ஆற்றின் வலுவான ஓட்டத்தால் இரண்டு பேருந்தும் அடித்துச் செல்லப்பட்டதாக அரசு செய்தித் தொடர்பாளர் கிமா நந்தா புசல் தெரிவித்தார்.
ஒரு பேருந்தில் 24 பேரும், மற்றொரு பேருந்தில் 41 பேரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். காணாமல் போனவர்களை தேடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நேபாளத்தில் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் முடிவடைகிறது. இந்த நேரத்தில் இமயமலையில் பலத்த மழை பெய்யும். இதனால் பரவலாக நிலச்சரிவு ஏற்படுகிறது.
Posted in: உலகம்