உலகம்

காஸாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 178 பேர் பலி..!

வெள்ளிக்கிழமை காலை போர் நிறுத்தம் முடிவடைந்ததையடுத்து காஸா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 178 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், இந்தத் தாக்குதல்களால் மீண்டும் காஸாவிலுள்ள மருத்துவமனைகளில் மோசமான நிலைமைகள் ஏற்படும் என ஐ.நா முகவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அக்டோபர் 24 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் காரணமாக ஒரு வார காலம் தாக்குதல்கள் இல்லாத நிலையில் இருந்தது. ஒப்பந்தம் ஆரம்பத்தில் நான்கு நாட்கள் மட்டுமே என்றாலும், பின்னர் பணயக்கைதிகளை விடுவிக்க இந்த காலம் நீட்டிக்கப்பட்டது. இதனால், இரு தரப்பிலும் தாக்குதல் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. ஹமாஸ் ஆரம்ப ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டி இஸ்ரேல் விமானத் தாக்குதல்களையும் தரைத் தாக்குதல்களையும் நடத்தியது. இதனால் பணயக்கைதிகளின் விடுதலை நிறுத்தப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty seven + = forty three

Back to top button
error: