gas cylinder blast

எண்ணெய் கிடங்கில் வெடிப்பு – 16 பேர் பலி..!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்நாட்டு அரசால் நடத்தப்படும் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். நேற்று வெள்ளிக்கிழமை பெய்த கனமழை மற்றும் மின்னலின் விளைவாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு ஜகார்த்தாவின் தனாஹ் மேரா பகுதியில் உள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் எண்ணெய் கிடங்கில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது. இந்தோனேசியாவின் எரிபொருள் தேவையில் 25 சதவீதம் இந்தக் கிடங்கில் இருந்துதான் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தீ மளமளவென பரவி, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் பரவியதால், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை, தீயணைப்புத் துறையினர் அவசரமாக வெளியேற்றி வருகின்றனர். எவ்வாறாயினும், இந்த தீயினால் நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.