தெற்கு துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு நெஞ்சை பதற வைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களின் அலறல்களால் பரிதாபமாக உள்ளது.
சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலும் கடுமையான நிலநடுக்கம் காணப்பட்டது. வடக்கு சிரியாவிலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு, 6.7 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதல் நிலநடுக்கம் காசியான்டெப் மாகாணத்தில் நுதர்கிக்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, மத்திய துருக்கியில் 9.9 கிலோமீட்டர் ஆழத்தில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
https://twitter.com/BNONews/status/1622413932542435330?s=20&t=a2QGiZ10_Y2-9ohCz6bkSg