நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானது. பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மர்சயங்கிடி ஆற்றில் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40 பயணிகளுடன் பொக்ராவிலிருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து. உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து வந்து 16 பேரை காப்பாற்றினர்.
மாவட்ட எஸ்பி மாதவ் பவுடல் மற்றும் 45 மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை தொடங்கினர். பேருந்து எண் (UPFT 7623) அடிப்படையில் அது உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டது.