ஓமன் கடற்கரையில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த தகவலை ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
கொமொரோஸ் கொடியுடன் பயணித்த பிரஸ்டீஜ் பால்கன் என்ற எண்ணெய்க் கப்பலின் பணியாளர்கள் 13 இந்தியர்களும் மூன்று இலங்கையர்களும் இருந்ததாக கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த 16 பணியாளர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திங்கட்கிழமையன்று ராஸ் மதராக்காவிலிருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்திற்கு அருகே கப்பல் கவிழ்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
2007 இல் கட்டப்பட்ட 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு டேங்கர் என்று LSEG ஷிப்பிங் தரவு வெளிப்படுத்தியது. இத்தகைய சிறிய டேங்கர்கள் பொதுவாக குறுகிய பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.