உலகம்

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு – ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளிய எலான் மஸ்க்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில வாரங்களாக இரண்டாவது இடத்தில இருந்து வந்த எலான் மஸ்க் தற்போது அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

எலான் மஸ்க்:

மின்னல் வேக ஹைப்பர் லூப் பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிறந்தவராக திகழ்ந்து வருகிறார் எலான் மஸ்க். சில மாதங்களாக டெஸ்லா நிறுவனத்தின் பங்கு அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் எலான் மஸ்கின் சொத்துக்களின் மதிப்பும் அதிகரித்து வருகிறது. தற்போது உலக பணக்காரர்களின் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.

1200px Elon Musk   The Summit 2013

இதில் கடந்த 2017ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இருந்தே அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து முதல் இடத்தில நீடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 2 வது இடத்தில் இருந்து வந்தார். நேற்று காலை 10.15 மணி நிலவரப்படி எலான் மஸ்கின் சொத்து 188.5 மில்லியன் டாலராக உயர்ந்தது.

இந்த மதிப்பு அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பை விட 1.5 மில்லியன் டாலர் உயர்வு. எனவே தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். கடந்த ஆண்டு மட்டுமே டெஸ்லாவின் பங்கு 743 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button
error: Content is protected !!