விளையாட்டு

லண்டனில் நடைபெற்று வரும் உலக டென்னிஸ் போட்டி : உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

உலக டென்னிஸ் போட்டியில், முதல்நிலை வீரர் Novak Djokovic, ரஷ்ய வீரர் Medvedev-விடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

உலகின் முன்னிலை வீரர்கள் 8 பேர் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. வீரர்கள் இரு பிரிவுகளாக பிரிக்‍கபட்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் Novak Djokovic, 4-ம் இடத்தில் உள்ள ரஷ்யாவின் Daniil Medvedev-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍க முதலே அதிரடியாக விளையாடி Djokovic-வை Medvedev திணறடித்தார். இறுதியில், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, Djokovic-க்‍கு அதிர்ச்சியளித்தார்.

இதன் மூலம் 2-வது வெற்றிபெற்றுள்ள Medvedev அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அதேசமயம், தோல்வியடைந்த Djokovic, நாளை நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ஜெர்மனியின் Alexander Zverev-வை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே Djokovic, அரை இறுதிக்கு தகுதி பெற முடியும்.

loading...
Back to top button
error: Content is protected !!