ஆரோக்கியம்தமிழ்நாடு

உலக புற்றுநோய் தினம்.. பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய்..

புற்று நோய் தினமானது 1933-ம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் பிப்ரவரி 4-ந் தேதி அன்று ஒவ்வொரு வருடமும் உலக புற்று நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. பொது மக்கள் மத்தியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. நோயின் தீவிர தன்மை, அறிகுறி, விழிப்புணர்வு ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

புற்றுநோய் என்பது உடலில் கட்டுப்பாடற்று செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுசெல்கள் ரத்தத்தின் வழியாக பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும். முதியோர்களை அதிகம் தாக்ககூடும். புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ள பணியில் ஈடுபடுதல், எச்.ஐ.வி நோய் தொற்று போன்ற காரணங்களாலும், மரபு வழியாக பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கும் இந்நோய் வரலாம்.ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை வென்றிடலாம் . முற்றிய நிலையில் தான் ஒருவரை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

அறிகுறிகள் :

உடல் உறுப்புகளில் தடிப்பு மற்றும் வீக்கம், தொடர் தலைமுடி உதிர்வு, ஆறாத புண்கள், தொடர் இருமல் மற்றும், உணவை விழுங்குவதில் பிரச்சினை ஏற்படுதல், உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறான ரத்தப்போக்கு, ரத்தக்கசிவு மற்றும் நோயின் தன்மைக்கேற்ப இதன் அறிகுறிகள் மாற்றமடையலாம்.

மார்பக புற்றுநோய் :

இன்றளவில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப்பப்பை புற்றுநோயுமே பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. உலக சுகாதார நிறுவனம் 2030-ம் ஆண்டளவில் வருடத்திற்கு 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் கர்ப்பப்பை புற்றுநோயினால் உயிரிழக்கலாம் என எச்சரித்துள்ளது. நோய் முற்றிய நிலையிலேயே தமக்கு புற்றுநோய் இருப்பதை பலரும் தெரிந்து கொள்கின்றனர். தமது உடலில் வித்தியாசமான அறிகுறிகள் தென்படுமாயின், முறையாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

Back to top button
error: Content is protected !!