தமிழ்நாடு

மின்சார வாரியத்தில் வேலை – மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியர் கைது!!

தமிழக மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தலைமைச் செயலக ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த வருடம் முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏராளமானோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு மீண்டும் கடைகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் மீண்டும் வேலைவாய்ப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில பண மோசடி செய்யும் கும்பல் வேலை வாங்கி தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் சில இணைய பக்கங்களில் வேலை வேண்டி விண்ணப்பிபவர்களின் விவரங்களை எடுத்து பணம் செலுத்தினால் வேலை என்று பணம் கையாடல் செய்கின்றனர். மேலும் அரசு வேலை கிடைக்க வேண்டுமென்ற ஆசை அனைவரிடமும் உள்ளது. இதை பயன்படுத்தி அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களை குறி வைத்து சிபாரிசு மூலமாக வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்த வகையில் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக பாலகிருஷ்ணன் என்பவரிடம் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பழனிக்குமார் என்பவர் ஏமாற்றியுள்ளார்.

சூளைமேடு பகுதியில் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பழனிக்குமார் என்பவர் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பாலகிருஷ்ணனிடம் ஆசிரியர் பழனி குமார் 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். வேலையும் வாங்கி தரவில்லை, பெற்ற பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என்ற மன உளைச்சலில் கடந்த 10 ஆம் தேதி பாலகிருஷ்ணன் பழனிக்குமாரின் வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பழனிக்குமாரை கைது செய்து விசாரித்த போது இந்த முறைகேட்டில் தலைமை செயலகத்தில் பணியாற்றும் பரமசிவம் என்பவருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர் பரமசிவம் கைது செய்யப்பட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பள்ளிகள் திறப்பில் புதிய சிக்கல் – மருத்துவ கல்லூரிகளில் பரவும் கொரோனா!!
Back to top button
error: