வேலைவாய்ப்பு

ரூ.18,000/- ஊதியத்தில் ICMR NIRT நிறுவனத்தில் வேலை– 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Project Technician & Project Driver Cum Mechanic பணிகளுக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

அதிகபட்சம் 25-30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
10/12ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றோடு ஓட்டுநர் உரிமமும் கொண்டிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பதாரர்கள் Walk-In-Written Test/ Skill Test/ Interview ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 17.08.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.08.2021 அன்று நடைபெறவுள்ள நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:  தமிழக பாலிடெக்னிக் கல்லூரியில் MTS வேலைவாய்ப்பு – 10வது தேர்ச்சி போதும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: