உலகம்

ஆப்கானில் கிரிக்கெட் போட்டியில் பெண்கள் பங்கேற்க தடை – தாலிபான்கள் அறிவிப்பு!!

ஆப்கானில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆப்கான் பெண்கள் பங்கேற்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்கு பிறகு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனால் ஆப்கானில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் அமெரிக்க நோட்டா படைகள் வெளியேறியுள்ளது. இதனால் ஆப்கான் முழுவதும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தாலிபான்களின் ஆட்சிக்கு பயந்து மக்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர். தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை பெண்கள் கல்வி கற்ற கூடாது. பொது இடங்களுக்கு வர கூடாது போன்ற கடும் கட்டுப்பாடுகள் உள்ளது.

இதற்கு அஞ்சியே மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு செல்ல நினைக்கின்றனர். தலிபான்கள் தலைமையிலான ஆட்சியில் முக்கிய பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆப்கான் பெண்கள் பங்கேற்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தாலிபான் அரசின் கலாச்சார ஆணையத் துணை தலைவர் கிரிக்கெட் விளையாட அனுமதித்தால் பெண்கள் ஆடை கட்டுப்பாடுகளை அவர்கள் மீறுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இது ஊடக யுகம் என்பதால் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றை மக்கள் பார்க்கிறார்கள். இஸ்லாமியம் பெண்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கவில்லை பெண்கள் உடல் வடிவத்தை வெளிப்படுத்தும் வகையிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை இஸ்லாமிய சட்டம் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பெண்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்காவிட்டால் ஆப்கான் ஆண்கள் அணிக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  42% பெண் ஊழியர்களுக்கு நெஸ்லே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – புதிய தகவல்!!
Back to top button
error: