தமிழ்நாடுமாவட்டம்

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்.. தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி..

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்துள்ள பேச்சக்காம்பட்டியை சேர்ந்த அருண் பாண்டியன் (28) என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்தார். அவருக்கும் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பெற்றுவரும் அந்த இளம்பெண் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 12-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த தன்னை அருண்பாண்டியன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Back to top button
error: Content is protected !!