தமிழ்நாடுமாவட்டம்

பட்டாசு கடை தீ விபத்து.. தந்தை மற்றும் 2 மகன்களை இழந்த பெண்! ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை..!

பட்டாசு கடை விபத்தில் தந்தை மற்றும் 2 மகன்களை இழந்த பெண், இன்று அதிகாலையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையம் பகுதியில் மோகன் (வயது 55) என்பவரது பட்டாசுக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு 2 நாட்களுக்கு முன், பிற்பகலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடையின் உரிமையாளரான மோகன் மற்றும் அவரது மகள் (வித்யாலெட்சுமி) வழி பேரன்கள் தேஜஸ் (வயது 8), தனுஜ்மோகன் (வயது 6) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாய் தற்கொலை

பட்டாசுக் கடை தீ விபத்தில் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூன்று பேர் இறந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தீ விபத்தில் தந்தை மற்றும் தனது மகன்கள் 2 பேரை பறிகொடுத்த வித்யாலெட்சுமி (வயது 34), கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய வித்யாலட்சுமி, லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து, இன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வித்யாலட்சுமியின் தற்கொலை, லத்தேரி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  உதடு வெடிப்புக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: