தமிழ்நாடு

இந்த ஆண்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படுமா? – உற்பத்தியாளர்கள் கருத்து!!

தென்னிந்தியா முழுவதும் இந்த ஆண்டில் உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுக்கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கணித்துள்ளனர்.

தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் தூத்துக்குடியும் அடுத்தபடியாக மரக்காணமும் வேதாரண்யமும் இருக்கிறது. பெரும்பாலும் தென்னிந்தியாவிற்கு இந்த பகுதிகளில் இருந்துதான் உப்பு விநியோகம் செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இங்கு உப்பு உற்பத்தி நடைபெறும்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களில் பெய்த மழையால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலுள்ள சுமார் 1500 ஏக்கர் பரப்பளவிலான உப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் மழைநீரில் முழுவதுமாக நனைந்து சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டில் உப்பு உற்பத்தி குறையும் என உற்பத்தியாளர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக, உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்ட உப்பு முழுவதுமாக கரைந்து விட்டது. மழை இப்படி தொடர்ந்து விட்டுவிட்டு பெய்தால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இத்தோடு முடிந்து விடும்” என்று என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உற்பத்தி குறைந்தால் உப்பின் விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த உப்பு உற்பத்தி தொழிலை மட்டுமே நம்பி சுமார் 1200 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: