தமிழ்நாடு

திமுக-காங்., தொகுதிப்பங்கீடு.. திரைமறைவில் எதிரொலிக்குமா நாயன்மார்கள் டூ பாண்டவர்கள்!

திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிக எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் தலைமையிடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின் திரைமறைவு கூட்டணி பேரம் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வரும் 25ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக தொகுதிகள் ஒதுக்க எதிர்ப்பு

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக எண்ணிகையில் தொகுதிகளை ஒதுக்க திமுக தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

768 512 10684083 thumbnail 3x2 yt 2302newsroom 1614060640 45

காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அந்தக் கட்சி 9 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.

தொகுதிகளை வாரி வழங்கிய திமுக

அந்த் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை வாரி வழங்கியது திமுக தலைமை. ஆனால் சுமார் 58 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.

இதனை அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி, ‘நாயன்மார்களுக்குரிய இடத்தை (63 சீட்) காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தேன், ஆனால் அவர்கள் பாண்டவர்களாய் (ஐந்தில் மட்டுமே வெற்றி) வந்தார்கள்’ என உவமையாகச் சொன்னார்.

சட்டப்பேரவைத் தேர்தல் 2021 திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, இதுபோன்ற சிலவற்றைச் சுட்டிக்காட்டி காங்கிரசுக்கு வழங்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக குறைக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

768 512 10330655 thumbnail 3x2 ks 2302newsroom 1614060640 403

2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றிபெற்றது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அக்கட்சிகள் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெறுவதில்லை என திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

திமுக வேட்பாளர்கள் போட்டியிட முடியாத நிலை

கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதால் அந்தத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படுவதாக திமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.

இதேபோல் வெற்றி வாய்ப்பு குறைவான உள்ள தொகுதிகள் ஒதுக்கப்படுவதால் தேர்தலை எதிர்கொள்வது சவாலாக உள்ளதாகவும், எனவே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் எனவும் அக்கட்சித் தொண்டர்கள் தலைமையிடம் வலியுறுத்திவருகின்றனர்.

768 512 10710118 thumbnail 3x2 trichy 2302newsroom 1614060640 284

எத்தனை தொகுதிகள் கிடைக்கும்

இந்நிலையில் இரு கட்சிகள் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை 25ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதே தொகுதிகள் கிடைக்குமா? அல்லது குறைவான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படுமா? இதற்கான விடை அடுத்த சில நாள்களில் தெரியும்.

Back to top button
error: Content is protected !!