ஆன்மீகம்

நவமி வழிபாடு நன்மைகளை தருமா?

சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் தினமாக நவமி கருதப்படுகிறது. நவமி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு பிறகு வருகின்ற 9-வது திதி ஆகும். பொதுவாக அஷ்டமி, நவமி திதிகளில் தொடங்கும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராமல், தொடர்ந்து கொண்டே போகும் என்பதால் இந்த திதிகளில் தொட்டது துலங்காது என கூறினர். மேலும், அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும் குணம் வாய்ந்தது.

இந்நிலையில் மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம் ஆகும். ராமர் அவதாரம் எடுத்த நவமி தினமே ராம நவமியாக வழிபடப்படுகின்றது. எனவே நவமி தின இறைவழிபாட்டால் கிடைக்கின்ற நன்மைகளை பார்க்கலாம்.

விரதமுறை

நவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்தி, பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனத்தால் பொட்டு வைத்து, துளசி மாலை அணிவிக்க வேண்டும்.

பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ராம நாமத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

நவமி தினத்தன்று உணவு சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாதர்கள் பால், பழம் போற்றவை சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம்.

வழிபாடு

ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும்.

ராமர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து முடித்த பிறகு, நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

நவமி தினத்தன்று, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதோடு, ஆஞ்சநேயரின் அருளும் கிடைக்கும்.

பலன்கள்

லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

குடும்ப நலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும்.

பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள்.

நீண்ட நாட்களாக இருக்கும் தீராத வியாதிகள் நீங்கும்.

இதையும் படிங்க:  தெய்வங்களுக்கு சாத்துக்குடி அபிஷேகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: