இந்தியா

இந்தியாவில் அதிகளவில் பரவும் பறவைக்காய்ச்சல் – 200 காகங்கள் ஒரே நேரத்தில் மரணம்!

நாட்டின் பகுதிகளிலும் பரவி வரும் பறவை காய்ச்சலால் பல்வேறு இடங்களில் பறவைகள் இறந்து வருகின்றன. நேற்று டெல்லி பூங்காவில் 200 காகங்கள் ஒரே நேரத்தில் இறந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பறவைக்காய்ச்சல்:

இந்தியாவில் புதிய கொரோனாவை தொடர்ந்து தற்போது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகமாக பரவி வருவது பறவைக்காய்ச்சலாகும். இது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து அதிகமான அளவில் பறவைகள் இறந்து வருகின்றன. இதுவரை ராஜஸ்தானில் 425 பறவைகளும், ஹிமாச்சலபிரதேசத்தில் 1800 க்கு மேற்பட்ட பறவைகளும், கேரளாவின் நீண்டூரில் உள்ள ஒரு வாத்து பண்ணையில் 1500 வாத்துகளும் இறந்துள்ளன.

PTI01 05 2021 000141B

தொடர்ந்து பறவைக்காய்ச்சல் கோழிப்பண்ணை, வாத்துப்பண்ணை ஆகியவற்றில் பரவி வருகின்றது. வளர்ப்பு பறவைகளான, வாத்து, கோழி, வான்கோழி போன்றவற்றின் கண்கள், காதுகள், அலகுகள் மற்றும் கழிவுகள் வழியாக பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் H5N8 என்ற கிருமி பரவுவதாக கால்நடை துறை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காகங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு அவற்றின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுத்தம் செய்யப்பட்ட பூங்கா

இதை தொடர்ந்து டெல்லியில் நேற்று பல்வேறு இடங்களில் கொத்து கொத்தாக காகங்கள் இறந்து விழுந்தன. குறிப்பாக மயூர் விகார் பகுதியிலுள்ள மத்திய பூங்காவில் நேற்று ஒரே நேரத்தில் 200 காகங்கள் இறந்து கிடந்தன. உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து ஆய்வு செய்து 5 காகங்களை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். அதன்பிறகு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு பூங்கா சுத்தம் செய்யப்பட்டது.

bird flu 1 20200308

இதே போல டெல்லியின் பல்வேறு பூங்காக்களிலும் நடந்து வருவதால் அங்கும் பறவை காய்ச்சல் பரவிவிட்டதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது பற்றி ஆய்வு செய்ய விரைவு பொறுப்பு குழு ஒன்றினை அனுப்ப டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அங்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Back to top button
error: Content is protected !!