ஆன்மீகம்தமிழ்நாடு

திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் விழா ஏன் நடைபெறவில்லை? முருகனின் ஐந்தாம் படைவீடு..!

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கந்த சஷ்டிவிரதம் தான். முருக பெருமானின் பக்கதர்கள் ஆறு நாட்கள் கடுமையாக விரதமிருந்து திருப்பெயர்கள், கந்தசஷ்டி பாடல்கள், கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை பாடி பக்தியில் பரவச நிலையை அடைவார்கள். இதில் சிறப்பாக சூரசம்ஹார விழா கொண்டாப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் நடப்பதில்லை.

முருகனின் 5-ம் படைவீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடப்பது இல்லை ஏன்?

கார்த்திகை மாதத்தில் ஆறு நாட்கள் விரதமிருந்து முருகனின் அருளை முழுமையாக பெற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி முருக பெருமானின் திருப்பெயர்கள், கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை பாடுவார்கள். இந்த ஆறு நாள் விரதத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது சூரசம்ஹாரம்.

sasty soorasam

இந்த நாளில் பக்தர்கள் தண்ணீர், உணவு ஏதுமின்றி கடுமையாக விரதமிருந்து அன்று மாலை பொழுது நடக்கும் சூரசம்ஹார விழாவில் முருக பெருமான் தன் வேலால் சூரபத்மனையும் அவனது சகோதரனையும் சம்ஹாரம் செய்யும் விழாவை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். முருக பெருமான் தன் வேலால் வதம் செய்வதை போல் நம் துன்பங்களும் மறைந்து போகும் என்று நம்புகிறார்கள்.

sasty abi

இந்நிலையில் முருக பெருமானின் ஐந்தாம் படைவீடான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் கொண்டாடப்படுவதில்லை. ஏனென்றால், முருகப்பெருமானின் கோபம் தணிந்து வள்ளியம்மையை திருமணம் செய்துகொண்டு அமைதியாக காட்சியளிக்கும் திருத்தலமாகும். முருக பெருமானின் மற்ற 5 படைவீடுகளிலும் சூரசம்ஹாரம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனால், திருத்தணியில் மட்டும் நடைபெறுவதில்லை.

kkkkkkk

ஆனால், முருக பெருமானின் அருளை பெற கூடிய மற்ற அனைத்து முறைகளும் சிறப்பாக நடைபெறும். கந்தசஷ்டி விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக வள்ளி – தெய்வானை திருமணம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் குடும்பத்தில் நன்மைகள் நடைபெறும் என்றும் கருதப்படுகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!