ஆன்மீகம்

ஒற்றை இலக்க எண்ணில் மொய் வைப்பது ஏன்?

பொதுவாக மொய் வைக்கும் சமயத்தில் 101, 501, 1001 என்று ஒற்றைப்படை விதத்தில் தான் மொய் வைக்கும் வழக்கம் இன்றும் பல இடங்களில் உள்ளது. இதற்கு சாஸ்திர ரீதியாக எந்த ஒரு காரணமும் இல்லை. ஆனால், இதிலும் ஒரு தத்துவம் தமிழர் திருமணத்தில் மறைந்து உள்ளது.

அது என்ன?

பொதுவாக, இரட்டைப்படை எண்ணை எளிதில் வகுக்க முடியும். அப்படி வகுத்தால் மீதம் (remainder) பூஜியமோ அல்லது perfect number தான் வரும். ஆனால் ஒற்றைப் படை எண்ணை வகுத்தால் பூஜ்யம் வராது. அதுமட்டுமல்லாமல் decimal ஆக தான் வரும். உதாரணம்: (100/2=50) , (101/2=50.5). இதன் அர்த்தம் இரட்டை படையில் மொய் வைக்கும் சமயத்தில், உனக்கும் – எனக்கும் இனி மிச்சம், மீதி எதுவும் இல்லை… இத்துடன் நமக்குள் உறவு முடிந்து விட்டது என்பதை சொல்வதாக ஒரு பொருள் அதில் உறைந்து உள்ளது.

அதுவே ஒற்றைப்படையில் மொய் வைக்கும் போது, இத்துடன் உனக்கும், எனக்கும் உறவு முடிந்து விட வில்லை. இன்னும் மீதம் இருக்கிறது. அது தொடரும். தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போன்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: