ஆரோக்கியம்

கால்களில் பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது ஏன்?

ஈரமான செருப்பு மற்றும் ஷூ, ஈரப்பதமான தட்ப வெப்ப நிலை, ஈரமான பாதம் காரணமாக கால்களின் பாதங்களை பூஞ்சை பாதிக்கும். கால் விரல்களின் நடுவில் வெள்ளை நிறங்கள் ஏற்படுவது, உள்ளங்கால் கீறலாகவோ அல்லது கனமாகவோ இருப்பது, நகங்களில் நிறம் மாறுவது போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும். பொதுவாக, மழைக்காலங்களில் தான் கால்களில் சேற்றுப் புண் ஏற்படும். அதையடுத்து, பூஞ்சை பாதிப்பு என்றால் என்ன? எதனால் பரவுகிறது, அதன் தீர்வு குறித்தும் பார்க்கலாம்.

பூஞ்சை பாதிப்பு விளக்கம்

காலில் உள்ள விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தோல் சுருங்கி, வெண்மை படர்ந்து, அழுக்கு போல் காணப்படுவது பூஞ்சை தொற்று. இதில், சற்று அரிப்பும், துர்நாற்றமும் இருந்தால், சேற்றுப் புண் எனப்படும்.

பாதிக்கப்பட்ட பகுதியை மற்றவர்கள் தொட்டாலோ அது அவர்களுக்கு பரவி விடும். இந்த பாதிப்பு நேரிடையாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் துண்டு, ஷாக்ஸ் மற்றும் ஷூ போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினாலும் இது எளிதில் பரவக் கூடியது.

இந்த பூஞ்சை பொதுவாக ஈரப்பதம் நிறைந்த சற்று வெதுவெதுப்பான இடமான ஷூ காலணியில் அல்லது குளிக்கும் அறையில் காணப்படும்.

இந்த பாதிப்பு பொதுவாக இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. அதிலும் பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்குகிறது.

என்ன காரணம்?

மழைநீர், சேறு, சுகாதாரமற்ற தண்ணீர் ஆகியவற்றில், நீண்ட நேரம் நிற்பது, செருப்பு அணியாமல் கரடு, முரடான பாதையில் நடப்பதாலும் வருகிறது.

தரமற்ற செருப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது, பாதங்களை அழுக்கு போக தேய்த்துக் குளிக்காதது, உடல் எடை அதிகமாக இருப்பது போன்றவையும் இதற்கு காரணமாக உள்ளது.

எதனால் காலில் மட்டும் வருகிறது

சேற்றுப் புண் அல்லது கால் பூஞ்சை தொற்று என்பது ஒரு அதீத பூஞ்சை தொற்றாகும்.

இந்த பூஞ்சை தொற்று விரைவாக வேகமாக பரவக் கூடிய தொற்றாகவும் உள்ளது.

இந்த பூஞ்சை தொற்று ட்ரைகோபைத்தான் ரூபிரம் என்ற பூஞ்சை வைரஸால் ஏற்படுகிறது.

கால்களில் இரத்த ஓட்ட பிரச்சனை இருப்பதன் காரணமாகவும், தோலில் அழற்சி இருப்பதாலும், பாதங்கள் எப்போதும் ஈரப்பதமாகவே இருப்பதன் காரணமாகவும் இவை காலில் மட்டும் வருகிறது.

வராமல் தடுப்பது எப்படி?

வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், கை, கால், முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

எப்போதும் பாதங்களை கழுவி சுத்தமாகவும், ஈரமில்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். பருத்தி சாக்சை பயன்படுத்துவது சிறந்தது.

ஒரே ஷூவை தொடர்ந்து போடாமல், மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

காலணி இல்லாமல் நடப்பதைத் தவிர்க்கவும். தரமான காலணிகளை அணிய வேண்டும்.

இதையும் படிங்க:  உடல் பருமனை குறைக்க உதவும் பூண்டு பால்!

சிகிச்சை

ஆவாரம் பூ, ரோஜா மொட்டு, கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கசகசா, பூலாங்கிழங்கு, சந்தனம் சேர்ந்த மருந்து, பரங்கிப்பட்டை சேர்ந்த மருந்து, அன்னபேதி, நற்பவளம் சேர்ந்த மருந்துகள் நல்ல பலனைத் தரும்.

சிற்றாமணக்கு நெய் சேர்ந்த மருந்து, வங்கச் செந்தூரம், மயில்துத்தம், வெண்ணெய் சேர்ந்த மருந்து, வீரம், நெய் சேர்ந்த மருந்து, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த மருந்து, படிகார நீர் போன்ற வெளிப்பூச்சு மருந்துகள் பயன்படுத்தினாலும் விரைந்து குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: