ஆன்மீகம்

காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது ஏன்?

பொதுவாகவே, இரவெல்லாம் உள்ளுறுப்புகள் வேகமாக வேலை செய்யும். இதனால் காலையில் விழிக்கும்போது, நம் உடலும் உள்ளுறுப்புகளும் சோர்வாக இருக்கும். இரத்த ஓட்டமும், இதய துடிப்பும் கூட குறைவாக இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் புத்துணர்வு பெற்று இரத்த ஓட்டம் அதிகமாகி உடலும் உள்ளமும் சுறுசுறுப்படைகிறது. மலச்சிக்கல், பசியின்மை உள்ளிட்ட பல நோய்களுக்கு தீர்வாக இந்த சூரிய நமஸ்காரம் இருக்கிறது. எனவே, இதை ஆன்மிக விஷயமாக மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சியாகவும் மேற்கொள்ளுதல் அவசியம்.

யோகாப்பியாசம் கூறுவது

யோகாப்பியாசத்தில் சூரிய நமஸ்காரத்தை செய்யும் முறை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. விடியற் காலையில் அதாவது, சூரியன் உதயமாகும் நேரத்திற்குள் எழுந்து காலைக் கடன்களை முடித்த பிறகு, குளித்து சுத்தமான ஆடை அணிந்து கொள்ளவும். விபூதி, குங்குமம், திருமண் இதில் எதையாவது நெற்றியில் இட்டுக் கொண்டு கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை வணங்குவதே சூரிய நமஸ்காரம். மூச்சை உள்ளிழுத்து கைகளை மார்பை ஒட்டினாற்போல் வைத்து கூப்பிக் கொண்டு செய்யலாம்.

இதையும் படிங்க:  பணம் அதிகரிக்க உதவும் எளிய பரிகாரங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: