ஆரோக்கியம்

மண்பானை தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பது ஏன்?

இன்றைய நிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரை விட மண்பானையில் வைத்திருக்கும் நீரை விரும்பி அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மின்சாரத்தைக் கொண்டு குளிரூட்டும் செயலை நமது முன்னோர்கள் மண்பானை மூலமாக செய்து காட்டினார்கள்.

எப்படி நிகழ்கிறது ?

மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளின் வெளியே முத்து முத்தாக வியர்த்திருப்பது போன்று நீர்த்திவலைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியேதான் இவ்வாறு நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கிறது.

தன்மையில் மாற்றம்

வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும், நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும். பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம் அதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது.

பனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும் காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று குளிர்ச்சியாக வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும் இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு குறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.

பக்கவிளைவில்லாத பானை

நவீன கால குளிர்சாதனப் பெட்டிகள் அளவிற்கு அதிகமாக குளிரச் செய்யும், பற்களையும் நடுநடுங்கச் செய்யும். ஆனால் அந்த அளவுக்கு மண்பானை தண்ணீரை குளிர்விக்காது. மண் பானை தண்ணீர் எவ்வளவு அருந்தினாலும் பக்க விளைவுகள் இருக்க வாய்ப்பில்லை.

முன்னோர்கள் முன்னோர்கள் தான்!!!

இதையும் படிங்க:  முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? இதை எல்லாம் சாப்பிடுங்க முடிக்கு எந்த பிரச்சனையும் வராது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: