ஆன்மீகம்

கண்ணனுக்கு ஏன் வெண்ணெய் படைக்கப்படுகிறது?

கிருஷ்ண ஜெயந்தி வந்த மாத்திரத்தில் கண்ணனுக்கு படைக்க முறுக்கும், சீடையும், வெண்ணெய்யும் பல இடங்களில் வாங்கப்படுகிறது. அதிலும், புராணங்களில் கூட கண்ணனுக்கு வெண்ணெய் நிவேதனம் செய்யப்படுகிறது.

கண்ணனுக்கு ஏன் வெண்ணை படைக்கப்படுகிறது?

உண்மையில்…

மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணை மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால், அது மட்டும் காரணம் அல்ல… கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் வெண்ணையை கூட விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள்.

கம்சனை கண்ணன் கொன்ற பிறகு மகிழ்ச்சியில் அந்த வெண்ணெய்யை கண்ணனுக்கு மக்கள் அளித்து கௌரவித்தனர். இது முதற்காரணம்…

ஆனால், கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைக்க இன்னொரு காரணமும் கூட சொல்லப்படுகிறது.

கண்ணன் ராஜா வீட்டுப் பிள்ளை ஆனால், கோகுலத்தில் அவனது நண்பர்கள் அப்படி அல்ல, அவர்களில் பலர் ஏழை எளியவர்கள். கண்ணனுக்கு தினம், தினம் யசோதா வெண்ணையை தர… அது மட்டும் தனது நண்பர்களுக்கு போதாது என்பதை உணர்ந்த கண்ணன். தன்வீடு மட்டும் அல்லாமல், பல வீடுகளில் இருந்தும் வெண்ணெய்யை திருடி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உண்டான். அது மட்டும் அல்ல, சில சமயங்களில் போதாத குறைக்கு உரியை அடித்தும், உடைத்தும் கூட தயிர், வெண்ணெய் என எதையும் விட்டு வைக்காமல் உண்டான். எனினும், கண்ணன் அழகில் மயங்கிய கோகுல வாசிகள் அவனை அடிக்கவும் மனம் இல்லாமல், அதட்டவும் மனம் இல்லாமல் தவித்தனர். இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இப்படியாகக் கண்ணன்….வெண்ணெய்யை தனது நண்பர்களுக்காகவும் திருடினான்.

இது போன்ற, கண்ணனின் லீலைகளை நினைவு படுத்தவும் தான் வெண்ணெய் ஸ்ரீ கிருஷ்ணருக்கு படைக்கப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அபிஷேகமும் அதன் பலன்களும்!!
Back to top button
error: