இந்தியா

ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி.. எதற்கு தெரியுமா?..

மகாராஷ்டிர விவசாயி ஒருவர், பால் வியாபாரத்துக்காக ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் வசித்து வருபவர் ஜனார்த்தன் போயிர். விவசாயியான இவர், பால் வியாபாரம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறார். பிவாண்டி பகுதியில் உள்ள தொழில் முனைவோர்களில் முக்கியமான ஒருவராக கருதப்படும் ஜனார்த்தன், ராஜஸ்தான், பஞ்சாப் குஜராத், ஹரியானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், ரூ.30 கோடி மதிப்பில் ஒரு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார் ஜனார்த்தன். அவரது வெளிமாநில பயணத்துக்கும் பால் வியாபாரத்துக்கும் உதவியாக இருக்கும் வகையில் ஹெலிகாப்டர் வாங்கி இருக்கிறார்.

அதாவது, தனது வீட்டுக்கு அருகே இருந்த சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஹெலிகாப்டர் நிறுத்துவதற்கான இடம், பைலட் அறை மற்றும் தொழில்நுட்ப அறை ஆகியவற்றை அமைத்து ரூ.30 கோடி செலவில் ஒரு ஹெலிகாப்டர் ஒன்றையும் வாங்கி விட்டுள்ளார்.

இதுகுறித்து ஜனார்த்தன் கூறுகையில், “நான் வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஹெலிகாப்டர் வாங்கியிருக்கிறேன். எனது வணிக வியாபாரத்தை போலவே பால் வியாபாரத்தையும் கவனித்துக் கொள்வதற்கு இந்த ஹெலிகாப்டர் மிகவும் உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

விவசாயி ஒருவர், தன்னுடைய பால் வியாபாரத்துக்காக ஹெலிகாப்டர் வாங்கி இருப்பது பலரது பாராட்டை பெற்றுள்ளதுடன், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Back to top button
error: Content is protected !!