ஆன்மீகம்

தொழிலுக்கும், செல்வத்திற்கும் தொடர்புடைய கிரகம் எது?

நாம் செய்யும் தொழில் நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதிகரித்து வரும் விலைவாசி, சமசீரற்ற பொருளாதார நிலையால் தங்கு தடையில்லா பண வரவு இருக்க வேண்டும் என்ற பலரும் விரும்புகின்றனர்.

இந்நிலையில் தொழில் மற்றும் செல்வத்திற்கு உரிய கிரகம் என்பது அவரவர் ஜாதகத்தை பொறுத்து மாறுபடும். எந்த ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும், லக்கினத்தில் இருந்து 2-ஆம் இடத்திற்கு அதிபதியான கிரகத்தை வைத்து செல்வத்தை கணக்கிடுவார்கள்.

அதே போல், லக்கினத்தில் இருந்து 10-ஆம் இடத்திற்கு அதிபதியான கிரகத்தை வைத்து தொழிலை சொல்வார்கள். அந்த வகையில், எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்கள், அதற்கு தொடர்புடைய கிரகங்களை முறைப்படி வழிபட்டால் தொழில் மூலமாக செல்வத்தை பெறலாம். நல்ல வாய்ப்புகளை அடையலாம் என்று பார்க்கலாம்.

லக்கினத்திற்கு உரிய கிரகம்

மேஷ லக்கினம் என்றால், சுக்கிரன் செல்வத்திற்கு உரிய கிரகம், சனி தொழிலுக்கு உரிய கிரகம்.

ரிஷப லக்கினம் என்றால், புதன் செல்வத்திற்கு உரிய கிரகம், சனி தொழிலுக்கு உரிய கிரகம்.

மிதுன லக்கினம் என்றால், சந்திரன் செல்வத்திற்கு உரிய கிரகம், குரு தொழிலுக்கு உரிய கிரகம்.

கடக லக்கினம் என்றால், சூரியன் செல்வத்திற்கு உரிய கிரகம், செவ்வாய் தொழிலுக்கு உரிய கிரகம்.

சிம்ம லக்கினம் என்றால், புதன் செல்வத்திற்கு உரிய கிரகம், சுக்கிரன் தொழிலுக்கு உரிய கிரகம்.

கன்னி லக்கினம் என்றால், சுக்கிரன் செல்வத்திற்கு உரிய கிரகம், புதன் தொழிலுக்கு உரிய கிரகம்.

துலாம் லக்கினம் என்றால், செவ்வாய் செல்வத்திற்கு உரிய கிரகம், சந்திரன் தொழிலுக்கு உரிய கிரகம்.

விருச்சிக லக்கினம் என்றால், குரு செல்வத்திற்கு உரிய கிரகம், சூரியன் தொழிலுக்கு உரிய கிரகம்.

தனுசு லக்கினம் என்றால், சனி செல்வத்திற்கு உரிய கிரகம், புதன் தொழிலுக்கு உரிய கிரகம்.

மகர லக்கினம் என்றால், சனி செல்வத்திற்கு உரிய கிரகம், சுக்கிரன் தொழிலுக்கு உரிய கிரகம்.

கும்ப லக்கினம் என்றால், குரு செல்வத்திற்கு உரிய கிரகம், செவ்வாய் தொழிலுக்கு உரிய கிரகம்.

மீனம் லக்கினம் என்றால், செவ்வாய் செல்வத்திற்கு உரிய கிரகம், குரு தொழிலுக்கு உரிய கிரகம்.

பொதுவாக தொழிலுக்கு தட்சணாமூர்த்தியையும், செல்வத்திற்கு சுக்கிரனையும் வணங்குவது நல்லது.

இதையும் படிங்க:  அமாவாசை நாள் நல்லதா? கெட்டதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: