ஆரோக்கியம்

யார் யாருக்கு எந்த பழம் சிறந்தது!

நமது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு பழங்கள் அதிகம் உதவுகின்றன. தினமும் பழங்கள் சாப்பிடுவதால் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகள் கிடைத்து, நினைவாற்றல் திறன் அபாரமாக பெருகும். அதனால்தான், ஞானிகளும், சித்தர்களும் காய் கனிகளையே அதிகம் சாப்பிட்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் இருந்ததை நமது வரலாறு கூறுகின்றன. அந்த வகையில் பழங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

பொதுவாக பழங்களில் நார்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், உடம்பை ஆரோக்கியமுடன் வைத்திருக்க உதவுகிறது. பழங்களில் நார்சத்து, நீர்சத்து, வைட்டமின் சி போன்றவைகளுடன் நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் இருக்கின்றது. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும். தினந்தோறும் ஏதாவது பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, காட்ராக்ட் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம்.

மேலும், மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம். அதனால்,எந்த வகையான பழங்கள் என்றாலும் 300 கிராம் அளவிற்கு தினமும் சாப்பிடுவதை கட்டாயமாக வைத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு பழங்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரித்து, உடல்உறுப்புகள் சுத்தமாகும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்து நச்சுக்களை வெளியேற்றும். கண் பார்வை தெளிவாகும். முதுமை தள்ளிப்போகும்.

இதில், வளரும் குழந்தைகளுக்கு சிறந்த பழமாக இருப்பது, பெரியவர்களுக்கு உகந்ததாக இருக்காது. நீரிழிவு நோய் உடையவர்களுக்கு சில பழங்கள் நற்பயன்களைத் தரும். சில வகை பழங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அதையடுத்து, யார் யாருக்கு எந்த பழம் சிறந்தது என பார்க்கலாம்.

சேர்க்க வேண்டியவை

 • குழந்தைகளுக்கு வாழைப்பழம்,
 • பெரியவர்களுக்கு கொய்யாப்பழம்,
 • நீரிழிவு உடையவர்களுக்கு பப்பாளி,
 • மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு கொய்யா,
 • வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மாதுளை,
 • பெண்களுக்கு திராட்சை,
 • உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம்,
 • ஒல்லியாக இருப்பவர்களுக்கு வாழைப்பழம்,
 • வயதானவர்களுக்கு கொய்யா,
 • மூட்டுவலி உடையவர்களுக்கு கொய்யா,
 • வாய்வுத் தொல்லை உடயைவர்களுக்கு கொய்யா,
 • வயிற்றில் பூச்சி உள்ளவர்களுக்கு சீதாப்பழம் – போன்ற பழங்களை தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய பழங்கள்

 • மலச்சிக்கல் உள்ளவர்கள் சப்போட்டா,
 • சளி உள்ளவர்கள் கொய்யா, வாழைப்பழம்,
 • உடல் பருமனாக இருப்பவர்கள் வாழைப்பழம்,
 • ஒல்லியாக இருப்பவர்கள் அன்னாசிப்பழம்,
 • நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் எலுமிச்சம் பழம்,
 • வாய்வுத்தொல்லை உள்ளவர்கள் ஆப்பிள் பழத்தை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க:  அசிடிட்டி தொல்லையால் அவதிப்படுபவரா? உங்களுக்கான 5 டிப்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: