ஆரோக்கியம்தமிழ்நாடு

கண்பார்வையை எளிதாக அதிகரிக்க வேண்டுமா? வீட்டில் இருந்தபடியே இதை சாப்பிட்டால் போதும்!

கண்பார்வையை அதிகரிக்க சில எளிய விஷயங்களை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.

சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: