ஆரோக்கியம்

முட்டையை ப்ரிட்ஜில் வைக்கலாமா ? கூடாதா?

நாம் வாங்கும் கோழி முட்டைகளை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல‌ என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில்  பராமரிக்கப்படும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கப்படும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமென்றும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப்போல் திரிந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

முட்டையை மிகக் குளிர்ச்சியான இடத்தில் வைத்து பராமரித்து வைத்து பின்னர் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் போது, முட்டையின் மேல் தோடு (ஓடு) அதிகம் வியர்த்து விடுகின்றது. முட்டையின் ஓட்டில் காணப்படும் சிறுதுளைகள் வழியாக‌ பாக்டீரியாக்கள் வேகமாக உள்புகுந்து வளர்ச்சியடைய‌ ஆரம்பிஹ்துவிடும். எனவே முட்டை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும் இல்லையெனில் அறை வெப்பநிலையில் வைத்து பராமரித்து வாருங்கள்

நாம் வாங்கும் முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதில் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை பிரிட்ஜில் வைக்க கூடாது.

கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது. இந்த பாக்டீரியா சாதாரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிக பிரபலமான மேயோ கிளினிக் கூறுகையில், முட்டையை பிரிட்ஜில் இருந்து எடுத்த பின்னர் 2 மணி நேரம் வெளியில் இருந்தால் கூட அதை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்துள்ளது. நீண்ட நாட்கள் முட்டையை பிரிட்ஜில் வைத்திருந்தாலும் முட்டை கெட்டு விடும். அத்துடன் சுவையும் கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர்.

மேலும் பிரிட்ஜில் உள்ள மற்ற உணவு பொருட்களின் வாசம் முட்டையின் ஒடு வழியாக ஊடுருவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இயல்பான ருசி பாதிக்கப்படும். முட்டையில் கரு உருவாவதை தடுக்க அவற்றை அவ்வப்போது அசைத்தல், இடம் மாற்றுதல் போன்ற எளிய முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
Back to top button
error: