ஆன்மீகம்

வீட்டின் படிக்கட்டு எங்கு அமைக்கலாம்?

வீட்டின் உள் முனைகளில் அதாவது வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய எந்த பகுதிகளிலும் படிக்கட்டு வரவே கூடாது. அதேபோல் வெளி முனைகளில் வடகிழக்குப் பகுதியிலும் படிக்கட்டு வரவே கூடாது.

படிக்கட்டு எங்கு வரலாம் என்றால் வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய வெளி முனைகளிலும் கேண்டி லிவர் முறையில் அமைக்கலாம் மற்றும் வீட்டினுல் தெற்கு, மத்தியிலும், மேற்கு மத்தியிலும் வரலாம்.

பாதிப்பு

வடகிழக்கில் படிக்கட்டு உள் மற்றும் வெளியே வரக்கூடாது குடும்பத்தலைவர் மற்றும் மூத்த குழந்தைகளின் முன்னேற்றங்களை மட்டுப்படுத்தும் முடக்கி விடும். அதேபோல் நம் வீட்டின் உள்முனை படிக்கட்டுகளில் வட மேற்கு தென்கிழக்கு தென்மேற்கு ஆகிய எந்தப் பகுதியிலும் வரக்கூடாது. அதனால் ஏற்படும் எதிர்மறை பலன்கள் பற்றி வரும் வாரங்களில் பார்க்கலாம்.

படி அமைப்பது

பொதுவாக, மக்களிடம் தென்மேற்குப் பகுதி உயரமாக இருக்கலாம் என்றும் அதிக கனத்துடன் இருக்கலாம் என்றும் தென்மேற்கில் உள் முனை படிகட்டுப் போடுவது வழக்கமாக உள்ளது. அது, அறவே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. எனவே படி அமைப்பது என்பது வாஸ்துவில் மிக முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:  அம்மன் கோயில்களில் திருமணம் ஆகாதவர்கள் அபிஷேகம் செய்யலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: