ஆன்மீகம்

வீட்டில் பூஜை அறை எங்கு இருப்பது சிறப்பு?

வீட்டிலுள்ள பூஜை அறை நேர்மறை ஆற்றலை கொடுப்பதுடன், குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் தனி மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால், வீடுகளில் பூஜை அறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதையடுத்து, வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் பூஜை அறை எங்கு அமைக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

தனி அறை

தற்போது, வீடுகளில் பூஜை அறைக்கு என தனி அறை கட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. இடவசதி இல்லாதவர்கள் செல்ப், கபோர்டு போன்ற அமைப்புகளை உருவாக்கி அதில் சாமி படங்கள், சிறிய சிலைகள் போன்றவற்றை வைத்து பூஜை அறையாக கொள்கிறார்கள்.

இந்நிலையில், வாஸ்துப்படி வீட்டில் பூஜை அறை இருக்க வேண்டிய திசையாக தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு நடுப்பகுதி, மேற்கு நடுப்பகுதி போன்ற இடங்கள் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் வரக்கூடிய பூஜை அறை மட்டுமே பல நன்மைகளை கொடுக்கும். இந்த இடத்தைத் தவிர வேறு எங்கு அமைத்தாலும் அது வீட்டிற்கு நல்ல பலன்களை தராது.

சரியான இடத்தில்

நாம் வணங்கும் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தான் வீட்டில் பூஜை அறைக்கு முக்கியத்துவம் தருகிறோம். ஆனால், அந்த பூஜை அறை சரியான இடத்தில் இருக்கும் போது அதன் பலன் அதிகரிக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைக்கு, தவறான இடத்தில் பூஜை அறை அமைந்திருப்பதே காரணமாகும்.

பாதிப்புகள்

பல வீடுகளில் வடகிழக்கில் பூஜை அறை இருக்கும் போது, அதனுடைய கெடுதலான பலன் அனைத்தும் வீட்டில் உள்ள ஆண்கள் மீதே ஏற்படும். அந்த குடும்பத்தில் ஆண்கள் நல்ல வேலைக்குப் போக முடியாத நிலை அல்லது வேலையே இல்லாமல் இருக்கும் நிலை உருவாகும். தந்தை, மகன் மற்றும் கணவன், மனைவி உறவுகளில் பாதிப்பு ஏற்படும்.

தென்மேற்கில் பூஜை அறை அமைந்தால் வியாபாரத்தில் நஷ்டம், கடன் சுமை, கணவன், மனைவிக்குள் பிரிவு ஏற்படுதல், விவாகரத்து, சொத்து கைவிட்டுப் போவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

பூஜை அறையில் உடைந்த சிலைகளை வைத்திருக்க கூடாது.

இறந்தவர்களின் புகைப்படங்களை பூஜை அறையில் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க:  புரட்டாசி மாத பௌர்ணமியின் சிறப்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: